எடப்பாடியை கண்டித்து கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்: மதுரையில் பரபரப்பு

மதுரை: மதுரையில் எடப்பாடி பழனிசாமியை கண்டித்து தேவரின கூட்டமைப்பினர் கருப்புகொடி ஆர்ப்பாட்டம் நடத்தினர். 10.5 சதவீத உள் இட ஒதுக்கீட்டில் தேவர் சமூகத்தினருக்கு துேராகம் இைழதத் எடப்பாடி பழனிசாமி மதுரை வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரை முனிச்சாலையில் நேற்று, தேவரின கூட்டமைப்பினர் சார்பில் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மதுரை, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி, தேனி மாவட்டங்களை சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

ஆர்ப்பாட்டத்தில், எடப்பாடி தேவர் சமூகத்தினருக்கு துரோகம் இழைத்ததாகவும், கொடநாடு கொலை வழக்கில் அவரை கைது செய்யக் கோரியும் கோஷங்கள் எழுப்பினர். இதில் முக்குலத்தோர் எழுச்சி கழகம், பசும்பொன் தேசிய கழகம், தென்னாட்டு மக்கள் கட்சி, பிஎம்டி மக்கள் பாதுகாப்பு இயக்கம், முக்குலத்தோர் தேசிய கழகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் கலந்து கொண்டனர். நிர்வாகிகள் பேசும்போது, ‘‘வரும் நாடாளுமன்ற தேர்தலில் எடப்பாடி ஆதரவாளர்களை தோற்கடிக்க வேண்டும். தென்மாவட்டங்களுக்கு எங்கு சென்றாலும் எடப்பாடிக்கு கருப்புக்கொடி ஏந்தி எதிர்ப்பு தெரிவிப்போம்’’ என்றனர்.

The post எடப்பாடியை கண்டித்து கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்: மதுரையில் பரபரப்பு appeared first on Dinakaran.

Related Stories: