நல்ல சாராயம் குறைக்கப்பட வேண்டும்; கள்ளச் சாரயம் ஒழிக்கப்பட வேண்டும்: கவிஞர் வைரமுத்து X தளத்தில் பதிவு

சென்னை : நல்ல சாராயம் குறைக்கப்பட வேண்டும்; கள்ளச் சாரயம் ஒழிக்கப்பட வேண்டும் என்று கவிஞர் வைரமுத்து X தளத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் அந்த பதிவில்,

“எந்தத் தேன் உணவானதோ
அதே தேனில் எறும்பும்

எந்தத் தண்ணீரில் மலரானதோ
அதே தண்ணீரில் தாமரையும்

எந்த நதியில் உயிர்கொண்டதோ
அதே நதியில் மீனினமும்

செத்து மிதப்பது
தெரிந்த பின்னும்

எந்த மது
மறக்கச்செய்கிறதோ
அதே மதுதான்
மரிக்கச்செய்கிறது என்பதனை
மறந்தனயே மனிதா!

நல்ல சாராயம்
குறைக்கப்பட வேண்டும்
கள்ளச் சாராயம்
ஒழிக்கப்பட வேண்டும்

இறப்பின் காரணம்
எதுவாயினும்
இரங்கத்தான் வேண்டும்
சாராயச்
சாவுகளுக்காகவல்ல;
சந்ததிகளுக்காக,” இவ்வாறு தெரிவித்துள்ளார்.

The post நல்ல சாராயம் குறைக்கப்பட வேண்டும்; கள்ளச் சாரயம் ஒழிக்கப்பட வேண்டும்: கவிஞர் வைரமுத்து X தளத்தில் பதிவு appeared first on Dinakaran.

Related Stories: