விஷச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டோருக்கு தீவிர சிகிச்சை: கள்ளக்குறிச்சி ஆட்சியர் பிரசாந்த் பேட்டி

கள்ளக்குறிச்சி: விஷச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டோருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என கள்ளக்குறிச்சி ஆட்சியர் பிரசாந்த் தெரிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் சாப்பிட்ட நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் உடல்நிலை பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் உடல்நிலை பாதிக்கப்பட்டவர்கள் கள்ளக்குறிச்சி சேலம் அரசு மருத்துவமனை விழுப்புரம் மற்றும் பாண்டிச்சேரி மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்; கள்ளக்குறிச்சி விஷச் சாராய சம்பவத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 47-ஆக உயர்ந்துள்ளது. விஷச்சாராயம் அருந்தி உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த பானிபூரி வியாபாரி ஒருவரும் உயிரிழந்தார். சேலம் மருத்துவமனையில் இன்று 3 பேர், கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் 2 பேர் உயிரிழந்ததால் பலி 47-ஆக உயர்ந்துள்ளது. விஷ சாராயம் அருந்தி பாதிக்கப்பட்ட 118 பேருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விஷச் சாராயம் குடித்து சிகிச்சை பெற்று வருவோரில் 30க்கும் மேற்பட்டோர் கவலைக்கிடமாக உள்ளனர்.

பல்வேறு மாவட்டங்களில் இருந்து கூடுதல் மருத்துவக்குழுக்கள் வரவழைக்கப்பட்டு, உயிர்காக்கும் சிகிச்சை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சிறந்த மருத்துவர்களைக் கொண்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 24 மணிநேரமும் மருத்துவ பணியாளர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். எப்போதும் கள்ளச்சாராய பிரச்சினை இருந்து வரும் மாவட்டமாக கள்ளக்குறிச்சி உள்ளது; போர்க்கால அடிப்படையில் தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விஷச்சாராயத்தால் பாதிக்கப்பட்டோரை மீட்டெடுக்க போதுமான அளவில் மருந்துகள் உள்ளன; போர்க்கால அடிப்படையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. பார்வை குறைபாட்டுடன் வந்த 99% நோயாளிகள் குணமடைந்து விட்டனர்.

விஷச்சாராய சம்பவத்தில் பலியானோர் குடும்பங்களுக்கும், பாதிக்கப்பட்டோருக்கும் அரசு சார்பில் அனைத்து உதவிகள் வழங்கப்படும். விஷச்சாராய சம்பவத்தில் பலியானோர் குடும்பங்களுக்கும், பாதிக்கப்பட்டோருக்கும் அரசு சார்பில் அனைத்து உதவிகள் வழங்கப்படும். விஷ சாராயம் அருந்தியவர்கள் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வர வேண்டும். விஷ சாராயம் அருந்திவிட்டோமோ என்ற சந்தேகம் இருந்தாலும் பரிசோதனை செய்து கொள்வது நல்லது. சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்ய முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளார். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவி செய்ய அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு இறுதி சடங்கு செய்யவும் அதிகாரிகள் உதவி வருகின்றனர். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவி செய்ய அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று கூறினார்.

The post விஷச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டோருக்கு தீவிர சிகிச்சை: கள்ளக்குறிச்சி ஆட்சியர் பிரசாந்த் பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: