மானாமதுரை பகுதியில் கடந்த ஒரு மாதத்திற்கு ேமலாக மழை பெய்யாமல் வெப்ப காற்று அனலாக வீசி வந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் மதியத்திற்கு பிறகு வானத்தில் கருமேகங்கள் திரண்டன. இரவு ஏழு மணிக்கு மேல் தூறலாக ஆரம்பித்த மழை பத்து மணிக்கு கனமழையாக பெய்யத் துவங்கியது.
கனமழை காரணமாக தெருக்களில் மழைநீர் புரண்டு ஓடியது. வெப்பம் தணிந்த நிலையில் குலாலர் தெருவில் மண்பாண்ட தயாரிப்புக் கூடத்தை சுற்றிலும் முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கியது. இந்த இடத்தில் மண்பாண்ட பொருட்கள் தயார் செய்ய பயன்படும் செம்மண், கரம்பை மண், சவுடுமண், களிமண் ஆகியவைகளை தொழிலாளர்கள் சேமித்து வைத்திருந்தனர்.
கன மழையால் இந்த மண்ணில் தண்ணீர் குளம் தேங்கியதால் இந்த மண்ணை எடுத்து மண்பாண்ட பொருட்கள் தயார் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மண்பாண்ட தொழிலாளர்களுக்கு இரண்டு மூன்று நாட்களுக்கு வேலை செய்ய முடியாத நிலை உள்ளது.
The post மழைநீர் தேங்கி நிற்பதால் மண்பாண்ட தொழில் பாதிப்பு appeared first on Dinakaran.
