திருத்தணி நகராட்சியில் கவுன்சிலர்கள் கூட்டம்

திருத்தணி: திருத்தணி நகராட்சி அலுவலகத்தில் கவுன்சிலர்களின் சாதாரண கூட்டம் நேற்று நடந்தது. இதில், முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. திருத்தணி நகராட்சி அலுவலகத்தில் கவுன்சிலர்களின் சாதாரண கூட்டம் நகர்மன்ற தலைவர் சரஸ்வதிபூபதி தலைமையில் நேற்று நடந்தது. ஆணையர் ராமஜெயம் வரவேற்றார். நகர்மன்ற துணை தலைவர் சாமிராஜ் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் வரவு- செலவு கணக்கு சரிபார்க்கப்பட்டது. தொடர்ந்து, கூட்டத்தில் திருத்தணி அரக்கோணம் சாலையில் புதியதாக, ரூ.12.74 கோடி மதிப்பீட்டில் கட்டி வரும் பஸ் நிலையத்திற்கு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா என பெயர் வைக்க வேண்டும்.

நகராட்சியில் உள்ள, 20 ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் படிக்கும், 1020 மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் வழங்க ஆணை பிறப்பிப்பு, அந்த பள்ளிகளை ஊராட்சி நிர்வாகத்தில் இருந்து நகராட்சி நிர்வாகத்திடம் இணைக்க உத்தரவு பிறப்பித்த தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிப்பு மற்றும் நகராட்சியில் இயங்கி வரும் தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு மாணவர்களின் பொதுஅறிவை பெருக்கும் வகையில், ரூ.55,000 மதிப்பிலான புத்தகங்கள் வழங்குவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், நகராட்சி பொறியாளர் கோபு, நகர வடிவமைப்பாளர் தயாநிதி, பணிமேற்பார்வையாளர் நாகராஜ் உள்பட நகராட்சி அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

The post திருத்தணி நகராட்சியில் கவுன்சிலர்கள் கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: