தமிழ்நாட்டில் 24 மணி நேரத்தில் 14 இடங்களில் கனமழை பதிவாகி உள்ளது: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் 24 மணி நேரத்தில் 14 இடங்களில் கனமழை பதிவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் மைலாடியில் 10 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. மாம்பழத்துறையாறு பகுதியில் 9 செ.மீ. மழை பதிவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. பாலாமோர் மற்றும் ஆணைக்கிடங்கு, தக்கலையில் தலா 8 செ.மீ. மழை பொழிந்துள்ளது. கொட்டாரம், நாலுமுக்கு, நாகர்கோவில், பெருஞ்சாணி அணை உள்ளிட்ட இடங்களில் தலா 7 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

The post தமிழ்நாட்டில் 24 மணி நேரத்தில் 14 இடங்களில் கனமழை பதிவாகி உள்ளது: வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: