பைக் சாகசத்தில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் பரிதாப பலி

*இளஞ்சிறார் படுகாயம்

உடன்குடி : குரும்பூர் அருகே பைக் சாகசத்தில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் பைக்குகள் மோதியதில் பரிதாபமாக இறந்தனர். இளஞ்சிறார் படுகாயம் அடைந்தார். தூத்துக்குடி மாவட்டம் குரும்பூர் அருகே குலைக்கநாதபுரத்தில் கட்டையன் பெருமாள் சாமி கோயில் கொடை விழா நடந்து வருகிறது. இவ்விழாவிற்கு வெளியூரில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர். இந்நிலையில் கோயிலுக்கு வந்த வாலிபர்கள் சிலர் திருச்செந்தூர் – நெல்லை ரோட்டில் நேற்று முன்தினம் பைக் சாகசத்தில் ஈடுபட்டனர். சிலர் தாறுமாறாக பைக்கை ஓட்டிச் சென்றனர்.

அப்போது குரும்பூர் அருகே குலைக்கநாதபுரத்தில் எதிர்பாராதவிதமாக 2 பைக்குகள் நேருக்குநேர் பயங்கரமாக மோதியது. இதில் குலைக்கநாதபுரத்தைச் சேர்ந்த ஞானம் மகன் ஜீவா என்ற ஜீவரத்தினம் (22), செந்தூர்பாண்டி மகன் பிரதீப்குமார் (23) ஆகிய 2 பேரும் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் இவர்களுடன் பைக் சாகசத்தில் ஈடுபட்ட 17 வயது சிறுவனும் படுகாயமடைந்து தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். பைக்குகள் மோதி உயிரிழந்த 2 பேரும் ஆறுமுகநேரியில் லோடு ஆட்ேடாவில் டிரைவர்களாக வேலை பார்த்து வந்தனர். இச்சம்பவத்தால் குலைக்கநாதபுரம் கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.

The post பைக் சாகசத்தில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் பரிதாப பலி appeared first on Dinakaran.

Related Stories: