மக்களவையில் நேரு குறித்து சர்ச்சை பேச்சு பிரதமர் மனக்குழப்பத்தில் இருக்கிறார்: காங். விமர்சனம்

புதுடெல்லி: மக்களவையில் நேற்று முன்தினம் பேசிய பிரதமர் மோடி, முன்னாள் பிரதமர்கள் நேரு மற்றும் இந்திராகாந்தி ஆகியோர் இந்தியர்கள் குறித்து கடுமையான கருத்துக்களை கூறியது குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். இதற்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து காங்கிரஸ் பொது செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது டிவிட்டர் பதிவில்,‘‘பாஜ மூத்த தலைவர்களான அடல் பிஹாரி வாஜ்பாய் மற்றும் அத்வானி ஆகியோர் இதனை ஒருபோதும் செய்யவில்லை. ஆனால் பிரதமர் மோடி இவ்வாறு செய்வது அவர் வகிக்கும் உயர் பதவியை இழிவுபடுத்துகிறது.

மாநிலங்களவையிலும் பிரதமர் இன்று (நேற்று) இதே போன்ற நடவடிக்கையில் ஈடுபடுவார் என்பதில் சந்தேகமில்லை. பாதுகாப்பின்மை மற்றும் சிக்கல்கள் காரணமாக இதுபோன்று பேசுகிறார். அவர் மனக்குழப்பத்தில் இருக்கிறார். இது நேருவை அரசியல் ரீதியாக அல்ல, தனிப்பட்ட முறையில் மிக கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். மக்களவையில் பிரதமர் மோடியின் கடைசி உரை என்ற முடிவுக்கு நாட்டு மக்கள் அதிலும் குறிப்பாக இளைஞர்கள் வந்துவிட்டனர்” என்று குறிப்பிட்டுள்ளார்.

The post மக்களவையில் நேரு குறித்து சர்ச்சை பேச்சு பிரதமர் மனக்குழப்பத்தில் இருக்கிறார்: காங். விமர்சனம் appeared first on Dinakaran.

Related Stories: