கல்லூரி கேன்டீன்களில் ஆரோக்கியமற்ற உணவுக்கு தடை: யுஜிசி அதிரடி சுற்றறிக்கை

புதுடெல்லி: பல்கலை, கல்லூரிகளில் செயல்படும் கேன்டீன்களில் ஆரோக்கியமற்ற உணவு விற்பனைக்கு தடை விதித்து யுஜிசி அதிரடி சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளுக்கு அனுப்பி உள்ள சுற்றறிக்கையில், ‘இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையின்படி, நாடு முழுவதும் உள்ள அனைத்து உயர்கல்வி நிறுவனங்களின் கேன்டீன்களில் ஆரோக்கியமற்ற உணவுகளை விற்பனை செய்ய தடை விதிக்கப்படுகிறது. இந்த உத்தரவானது அனைத்து பொறியியல், மருத்துவம், கட்டிடக்கலை மற்றும் பிற பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் செயல்படும் கேன்டீன்களுக்குப் பொருந்தும்.

கேன்டீன்களில் ஆரோக்கியமான மற்றும் சத்தான உணவுகளை விற்க வேண்டும். இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் அறிக்கையில், இந்தியாவில் நான்கு பேரில் ஒருவர் உடல் பருமன் அல்லது நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு முக்கிய காரணம், ஆரோக்கியமற்ற உணவுகளை உண்பதால் தான் பாதிப்புகள் ஏற்படுகிறது. தொற்றுநோயியல், மனித ஊட்டச்சத்து, சமூக ஊட்டச்சத்து, குழந்தை மருத்துவம், மருத்துவக் கல்வி, நிர்வாகம், சமூகப் பணி மற்றும் மேலாண்மை போன்ற பல்வேறு பாடங்களில் நிபுணர்களை கொண்டு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்’ என்று தெரிவித்துள்ளது.

The post கல்லூரி கேன்டீன்களில் ஆரோக்கியமற்ற உணவுக்கு தடை: யுஜிசி அதிரடி சுற்றறிக்கை appeared first on Dinakaran.

Related Stories: