ஓரினச்சேர்க்கை இனிமேல் பாலியல் குற்றமில்லை: தேசிய மருத்துவ ஆணையம் அறிவிப்பு

புதுடெல்லி: ஓரினச்சேர்க்கை, லெஸ்பியன் உள்ளிட்டவை இனிமேல் இயற்கைக்கு மாறான பாலியல் குற்றமில்லை என்று வழிகாட்டு நெறிமுறைகளை தேசிய மருத்துவ ஆணையம் திருத்தி வெளியிட்டுள்ளது. தேசிய மருத்துவ ஆணையம் சார்பில் நேற்று திறன் அடிப்படையிலான மருத்துவக் கல்வி பாடத்திட்டத்திற்கான திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களை வெளியிட்டது. அதில் ஓரினச்சேர்க்கை மற்றும் லெஸ்பியனிசம் ஆகியவை இயற்கைக்கு மாறான பாலியல் குற்றங்கள் என்ற வரையறை நீக்கப்பட்டது. அதே போல் கன்னித்தன்மை, கன்னிச்சிதைவை வரையறுப்பது உள்ளிட்டவைகளும் நீக்கப்பட்டுள்ளன. கன்னித்தன்மையை சோதிக்க பெண் பிறப்புறுப்பில் விரல் பரிசோதனைகள் உட்பட சோதனைகள் நடத்துவது அறிவியலற்றது, மனிதாபிமானமற்றது, பாரபட்சமானது என்று திருத்தப்பட்ட நெறிமுறை தெரிவித்துள்ளது.

The post ஓரினச்சேர்க்கை இனிமேல் பாலியல் குற்றமில்லை: தேசிய மருத்துவ ஆணையம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: