மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, ஐசிஐசிஐ வங்கி, டாக்டர் ரெட்டிஸ் மற்றும் பிடிலைட் உள்ளிட்ட ஆறு நிறுவனங்களிடமிருந்து கடந்த 2016 மற்றும் 2024 க்கு இடையில் புச் மற்றும் அவரது ஆலோசனை நிறுவனமான அகோரா பிரைவேட் லிமிடெட் கிட்டத்தட்ட ரூ.2.95 கோடியைப் பெற்றுள்ளதாக காங்கிரஸ் கட்சி தெரிவித்தது. மொத்தம் ரூ.2.95 கோடியில், ரூ.2.59 கோடி மஹிந்திரா & மஹிந்திரா குழுமத்திலிருந்து மட்டும் வந்தது. இது அகோராவின் வருவாயில் 88% ஆகும். மேலும், மாதபி பூரி புச்சின் கணவர் தவால் புச், மஹிந்திரா நிறுவனத்திடம் இருந்து ரூ.4.78 கோடி தனிப்பட்ட வருமானம் பெற்றதாக காங்கிரஸ் கட்சி தெரிவித்தது. இந்த புதிய குற்றச்சாட்டுகள் குறித்து மாதபி புச் பல வாரங்களாக அமைதி காத்து வருவது ஏன் என ஹிண்டன்பர்க் கேள்வி எழுப்பியுள்ளது.
The post அடுத்தடுத்து குற்றச்சாட்டுகள் எழுப்பப்படும் நிலையில் செபி தலைவர் தொடர்ந்து மவுனம் காப்பது ஏன்? ஹிண்டன்பர்க் கேள்வி appeared first on Dinakaran.