மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம்

 

ராசிபுரம், டிச.31: ராசிபுரம் அருகே, அத்தனூரில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நேற்று நடந்தது. ராசிபுரம் சட்டமன்ற தொகுதி, அத்தனூர் பேரூராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடைபெற்றது. ராஜேஸ்குமார் எம்பி, கலெக்டர் உமா ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றுக் கொண்டனர். முகாமில், ராஜேஸ்குமார் எம்பி பேசுகையில், ‘தமிழக முதலமைச்சர், பெண்களுக்கான இலவச பஸ் பயணம், புதுமைப்பெண் திட்டம், மகளிர் உரிமைத்தொகை திட்டம், மக்களைத்தேடி மருத்துவம், பள்ளி மாணவர்களுக்கு காலை உணவுத்திட்டம், நான் முதல்வன் திட்டம் என அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

மக்களைத் தேடி அரசு செல்ல வேண்டுமென்ற உயரிய நோக்கத்தோடு, மக்களுடன் முதல்வர் என்ற திட்டத்தை செயல்படுத்தியுள்ளார். இதில் பெறப்பட்ட தகுதி வாய்ந்த மனுக்களின் மீது 30 நாட்களில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்,’ என்றார். இம்முகாமில், ஒன்றிய குழு உறுப்பினர் துரைசாமி, அத்தனூர் பேரூராட்சி தலைவர் சின்னசாமி, துணை தலைவர் கண்ணன், செயல் அலுவலர் அண்ணாமலை, உள்ளாட்சி பிரதிநிதிகள், துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

The post மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம் appeared first on Dinakaran.

Related Stories: