கக்கன் பிறந்தநாள் விழா ₹16.19 லட்சத்தில் புதிய கட்டிடங்கள்

சேந்தமங்கலம், ஜூன் 19: புதுச்சத்திரம் அடுத்த தாளம்பாடி ஊராட்சியில் ₹16.19 லட்சத்தில் புதிய கட்டிடங்களை, ராமலிங்கம் எம்எல்ஏ திறந்து வைத்தார். புதுச்சத்திரம் அருகே தாளம்பாடி ஊராட்சி மூர்த்தி நாயக்கன்பட்டி கிராமத்தில், ₹10.19 லட்சத்தில் புதிய அங்கன்வாடி மையம் கட்டப்பட்டு உள்ளது. சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து பழனி நாயக்கனூர் கிராமத்தில் ₹6 லட்சத்தில் சமுதாயக் கூடம் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு ஒன்றிய திமுக பொறுப்பாளர் ஜெயபிரகாஷ் தலைமை வகித்தார். ஊராட்சி மன்ற தலைவர் சதீஷ்குமார் முன்னிலை விகித்தார்.

இதில் நாமக்கல் எம்எல்ஏ ராமலிங்கம் கலந்துகொண்டு, புதிய கட்டிடங்களை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்து, அப்பகுதி பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து, கோரிக்கை மனுக்களை பெற்று கொண்டார். இந்நிகழ்ச்சியில் ஒன்றிய குழு உறுப்பினர் கோபிநாத், ஒன்றிய திமுக துணை செயலாளர் பிரபாவதி சுப்பிரமணி, கரடிப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் தங்கம்மாள் முத்துசாமி, திமுக நிர்வாகிகள் வார்டு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post கக்கன் பிறந்தநாள் விழா ₹16.19 லட்சத்தில் புதிய கட்டிடங்கள் appeared first on Dinakaran.

Related Stories: