இன்றும், நாளையும் மின் மயானம் இயங்காது

குமாரபாளையம், ஜூன் 20: குமாரபாளையம் நகராட்சியின் மின்மயானத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இன்றும், நாளையும் மின்மயானம் இயங்காதென நகராட்சி ஆணையாளர் அறிவித்துள்ளார். குமாரபாளையம் நகராட்சியின் மின்மயானம் ரோட்டரி சங்க நிர்வாகத்தின் மூலம் நடைபெற்று வருகிறது. இங்கு இன்று (20ம் தேதி), நாளை (21ம் தேதி)யும் பராமரிப்புபணிகள் நடைபெறுகிறது. இதனால் இன்றும், நாளையும் மின் மயானம் இயங்காதெனவும், மயானத்தில் சடலங்கள் எரியூட்டப்படாதெனவும் நகராட்சி ஆணையாளர் குமரன் தெரிவித்துள்ளார். பராமரிப்பு பணிகளுக்கு பிறகு, வழக்கம் போல மயானத்தில் எரியூட்டும் பணிகள் நடைபெறும் என அவர் தெரிவித்தார்.

The post இன்றும், நாளையும் மின் மயானம் இயங்காது appeared first on Dinakaran.

Related Stories: