திருநெல்வேலியில் இருந்து காலை 6 மணிக்கு புறப்படும் வந்தே பாரத் ரயில், சென்னைக்கு பிற்பகல் 2 மணிக்கு வந்தடையும் என்றும், சென்னையிலிருந்து பிற்பகல் 3 மணிக்கு புறப்படும் ரயில் இரவு 11 மணியளவில் திருநெல்வேலியை சென்றடையும் என்றும் கூறப்படுகிறது. இந்த ரயில் திருச்சி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட மூன்று நிலையங்களில் நின்று செல்லும் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் சென்னை -நெல்லை இடையான வந்தே பாரத் ரயிலை தொடங்க இருப்பதாக கூறப்படும் நிலையில், இதற்கான ரயில் எண் ஒதுக்கப்பட்டுள்ளது. சென்னை- திருநெல்வேலி இடையே இயக்க திட்டமிட்டிருக்கும் வந்தே பாரத் ரயிலுக்கு 20631/ 20632 என எண் ஒதுக்கப்பட்டுள்ளதால், விரைவில் பயன்பாட்டிற்கு வரும் என்ற நம்பிக்கையில் நெல்லை பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
The post சென்னை-நெல்லை இடையே ஓடும் வந்தே பாரத் ரயிலுக்கான எண் ஒதுக்கீடு appeared first on Dinakaran.
