சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் வெள்ள நிவாரணமாக ரூ.6,000 வழங்குவதற்கான அரசாணை வெளியீடு..!!

சென்னை: சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் வெள்ள நிவாரணமாக ரூ.6,000 வழங்குவதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. சென்னையில் அனைத்து வட்டங்களிலும் பாதிக்கப்பட்டோருக்கு ரூ.6,000 நிவாரணம். செங்கல்பட்டில் தாம்பரம், பல்லாவரம், வண்டலூர் வட்டங்களில் முழுமையாக நிவாரணம் வழங்கப்படும். திருப்போரூர் வட்டத்தில் 3 வருவாய் கிராமங்களில் பாதிக்கப்பட்டோருக்கு வெள்ள நிவாரணம் தரப்படும். காஞ்சிபுரத்தில் குன்றத்தூர் முழுமையாகவும், ஸ்ரீபெரும்புதூரில் 3 வருவாய் கிராமங்களுக்கும் நிவாரணம். பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, ஊத்துக்கோட்டை ஆகிய வட்டங்களில் பாதித்தோருக்கு வெள்ள நிவாரணம். ஆவடி, பூந்தமல்லி, திருவள்ளூர் வட்டங்களில் பாதித்தோருக்கும் ரூ.6,000 நிவாரணம் தரப்படும் என அரசு அறிவித்துள்ளது.

The post சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் வெள்ள நிவாரணமாக ரூ.6,000 வழங்குவதற்கான அரசாணை வெளியீடு..!! appeared first on Dinakaran.

Related Stories: