சிபிஐ, அமலாக்கத்துறை சாட்சிகளை கட்டாயபடுத்தியதற்கு ஆதாரம் உள்ளது: ஆம் ஆத்மி தகவல்

புதுடெல்லி: சிபிஐ அமலாக்கத்துறை சாட்சிகளை கட்டாயபடுத்தியதற்கு ஆதாரங்கள் உள்ளன. உரிய நேரத்தில் அவற்றை வெளியிடுவேன்,” என்று ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை எம்பி சஞ்சய் சிங் தெரிவித்துள்ளார். டெல்லியில் பத்திரிகையாளர்களை சந்தித்த அவர், “டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் துப்பாக்கி முனையில் சாட்சிகளிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. பிரதமர் மோடி உத்தரவின் பேரில் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையில் பணிபுரியும் இரண்டு அல்லது மூன்று அதிகாரிகள் இதனை செய்துள்ளனர். அவர்கள் நேர்மையுடன் பணியாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். ஆம் ஆத்மி கட்சி மற்றும் அதன் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவாலை ஒழிக்க சதி திட்டம் தீட்டப்பட்டுள்ளது. கெஜ்ரிவாலை எதிர்த்து வாக்குமூலம் கொடுக்கும்படி அவர்கள் அச்சுறுத்தப்பட்டு துன்புறுத்தப்பட்டார்கள். இந்த சதி திட்டம் எப்படி தீட்டப்பட்டது என்பதற்கான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளது. உரிய நேரத்தில் அவற்றை வெளியிடுவோம்,” என்று தெரிவித்தார்.

The post சிபிஐ, அமலாக்கத்துறை சாட்சிகளை கட்டாயபடுத்தியதற்கு ஆதாரம் உள்ளது: ஆம் ஆத்மி தகவல் appeared first on Dinakaran.

Related Stories: