பாஜ கூட்டணிக்கு 450 இடங்கள் கிடைக்கும்: உமாபாரதி நம்பிக்கை

போபால்: மத்தியபிரதேச முன்னாள் முதல்வரும், முன்னாள் ஒன்றிய அமைச்சருமான உமாபாரதி தனது எக்ஸ் பதிவில், ‘பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்த யாத்ரீகர்கள் மற்றும் இமயமலையில் நான் தங்கியிருந்த கடந்த இரண்டரை மாதங்களில் நான் சந்தித்த அனைவரும் பிரதமர் மோடியைப் பற்றி மட்டுமே பேசினர். தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் என்னவாக இருந்தாலும், எனது மதிப்பீடு பா.ஜ கூட்டணி 450 இடங்களுக்கும் குறையாமல் வெற்றி பெறும்.

கன்னியாகுமரியில் மோடி செய்த தியானத்தை, தெய்வீக நபர் மட்டுமே செய்ய முடியும். பிரதமர் மோடி கங்கையை தனது தாயுடன் ஒப்பிட்டுள்ளார். இது அவரது நதிகள் பாதுகாப்பு திட்டம் தொடர்பான கனவை நிறைவேற்றும் என்ற நம்பிக்கையை வலுப்படுத்தியுள்ளது. இவ்வாறு தெரிவித்து உள்ளார்.

 

The post பாஜ கூட்டணிக்கு 450 இடங்கள் கிடைக்கும்: உமாபாரதி நம்பிக்கை appeared first on Dinakaran.

Related Stories: