ராம நவமியின்போது பாஜ வன்முறையை தூண்டியது: முதல்வர் மம்தா குற்றச்சாட்டு

ராய்கஞ்ச்: மேற்கு வங்க மாநிலத்தில் ராம நவமி கொண்டாட்டத்தின்போது வன்முறையை தூண்டியது பாஜ தான் என்று முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார். மேற்கு வங்க மாநிலம், முர்ஷிதாபாத் மாவட்டத்தில் உள்ள ஷக்திபூரில் நேற்று முன்தினம் ராம நவமி கொண்டாடப்பட்டது. ஊர்வலம் நடக்கும் இடத்திற்கு அருகே திடீரென குண்டு வெடித்து சிதறியது. இதில் பெண் ஒருவர் காயமடைந்தார்.

இந்நிலையில் ராய்கஞ்ச் மக்களவை தொகுதியில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய முதல்வர் மம்தா பானர்ஜி,‘‘முர்ஷிதாபாத்தில் நடந்த வன்முறை முன்கூட்டியே திட்டமிட்டப்பட்டது. ராம நவமிக்கு முன்னதாக முர்ஷிதாபாத் டிஐஜி மாற்றப்பட்டார். எனவே நீங்கள்(பாஜ) வன்முறையை நடத்தலாம். மக்களவை தேர்தலை முன்னிட்டு பாஜ தான் வன்முறையை தூண்டியுள்ளது. பாஜவுடன் தொடர்புடைய தொண்டர்கள் காவல்துறை அதிகாரிகளையும் கடுமையாக தாக்கியுள்ளனர்” என்றார்.

The post ராம நவமியின்போது பாஜ வன்முறையை தூண்டியது: முதல்வர் மம்தா குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Related Stories: