பா.ஜ கூட்டணி வௌியேறும்… ஜூன் 4ல் இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்கும்: தேஜஸ்வி யாதவ் உறுதி

பாட்னா: ஜூன் 4ம் தேதி இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்கும் என ராஷ்ட்ரிய ஜனதா தலைவர் தேஜஸ்வி யாதவ் உறுதியுடன் தெரிவித்தார். பீகாரின் மொத்தமுள்ள 40 தொகுதிகளில் 32 தொகுதிகளுக்கு 6 கட்டங்களாக தேர்தல் நடந்து முடிந்த நிலையில் மீதமிருந்த 8 தொகுதிகளுக்கும் நேற்று வாக்குப் பதிவு நிறைவடைந்தது. பீகார் முன்னாள் துணை முதல்வரும், ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவருமான தேஜஸ்வி யாதவ் நேற்று பாட்னாவில் தனது வாக்கை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தேஜஸ்வி யாதவ், “ஜூன் 4ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் வெளியானவுடன் பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு வௌியேறும். இந்தியா கூட்டணி மாபெரும் வெற்றியுடன் ஆட்சி அமைக்கும். தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு தொடர்பான விவாதங்களில் நம்பிக்கை இல்லை. இந்த கருத்து கணிப்புகளை நடத்துபவர்கள் யார்? அதில் யார் சொல்வதை நாம் தீவிரமாக எடுத்து கொள்வது? உண்மையை சொல்ல வேண்டுமெனில், நாங்கள் பொதுமக்களின் கருத்துகளை நேரடியாக கேட்டுள்ளோம். பொதுமக்களின் உணர்வு எங்களுக்கு தெரியும்” என்று கூறினார்.

The post பா.ஜ கூட்டணி வௌியேறும்… ஜூன் 4ல் இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்கும்: தேஜஸ்வி யாதவ் உறுதி appeared first on Dinakaran.

Related Stories: