ஜெகன்மோகனா? சந்திரபாபுநாயுடுவா? ஆந்திராவில் ஆட்சியை பிடிப்பது யார்? பந்தயம் கட்டும் அரசியல் கட்சி தலைவர்கள்

திருமலை: நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை ஆந்திர மாநிலத்தில் ஆட்சியை பிடிப்பது யார் என்று அரசியல் தலைவர்கள் பந்தயம் கட்டி வருகின்றனர். நாடு முழுவதும் இறுதிக்கட்ட தேர்தல் நேற்றுடன் நிறைவடைந்தது. ஆந்திராவில் எம்.பி. தேர்தலுடன் சட்டப்பேரவைக்கு தேர்தல் ஒரே கட்டமாக மே 13ம் தேதி நடந்தது. இதில் யார் ஆட்சியை கைப்பற்றுவார்கள் என்று கடும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. வாக்கு எண்ணிக்கைக்கு ஒரு நாட்களே உள்ள நிலையில் ஆந்திர மாநிலத்தில் ஆட்சிக்கு வருவது யார்? மீண்டும் முதல்வர் பதவி ஏற்பது ஜெகன் மோகனா அல்லது சந்திரபாபு நாயுடுவா, யாருடைய கட்சிக்கு மெஜாரிட்டி அதிகரிக்கும், குறையும் என பந்தயம் கட்டப்பட்டு வருகிறது.

இதில் தற்போது தலைவர்களும் இந்த பட்டியலில் கர்னூல் மாவட்டம் கோசுகி ஜில்லா பரிஷத் உறுப்பினர் மங்கம்மா மந்த்ராலயம் தொகுதி ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் எம்.எல்.ஏ. பாலநாகி வெற்றி பெற்று அமைச்சராக பதவியேற்பார் என்று பந்தயம் கட்டி உள்ளார். ஒய்.எஸ்.ஜெகன் 2வது முறையாக முதல்வராக பதவியேற்பார் எனக்கூறி ரூ.20 லட்சம் பந்தயம் கட்டுவதாகவும், தைரியம் இருந்தால் யாராக இருந்தாலும் பந்தயத்திற்கு வரலாம் என கூறியுள்ளார். இந்த வீடியே வலை தளங்களில் வைரலானது. இதற்கு ஈடாக மந்த்ராலயம் மண்டலம் வகரூரைச் சேர்ந்த தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் மாத்ரி சின்னண்ணா தெலுங்கு தேச கட்சி எம்.எல்.ஏ. வேட்பாளரான என்.ராகவேந்திரா, அக்கட்சி தலைவர் சந்திரபாபு அதிக பெரும்பான்மையுடன் வெற்றி பெறுவார்கள் எனவும், இதற்காக ரூ.50 லட்சம் மதிப்புள்ள இரண்டு ஏக்கர் விவசாய நிலம் பந்தயம் கட்டுவதாக எதிர் சவால் விடுத்துள்ளார்.

The post ஜெகன்மோகனா? சந்திரபாபுநாயுடுவா? ஆந்திராவில் ஆட்சியை பிடிப்பது யார்? பந்தயம் கட்டும் அரசியல் கட்சி தலைவர்கள் appeared first on Dinakaran.

Related Stories: