மக்கள் வரிப்பணத்தில் ஊடக விளம்பரத்துக்காகவே மோடி தியானம் செய்கிறார்: திரிணாமுல் காங்கிரஸ் கடும் தாக்கு

கொல்கத்தா: மக்கள் வரிப்பணத்தில் ஊடக விளம்பரத்துக்காகவே மோடி தியானம் செய்வதாக திரிணாமுல் காங்கிரஸ் கடுமையாக சாடி உள்ளது. மேற்குவங்கத்தின் 9 ெதாகுதிகளுக்கு கடைசி கட்டமான நேற்று வாக்குப் பதிவு நடந்து முடிந்தது. இந்நிலையில் டைமன்ட் ஹார்பர் தொகுதியில் போட்டியிடும் திரிணாமுல் காங்கிரசின் தேசிய பொதுசெயலாளர் அபிஷேக் பானர்ஜி நேற்று வாக்களித்த பின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கன்னியாகுமரியில் மோடி தியானம் செய்வது குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த அபிஷேக் பானர்ஜி “நானும், நீங்களும் யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் தியானம் செய்யலாம். அதில் தவறில்லை. தியானம் என்பது உடல், மனம், ஆன்மாவுக்கு நன்மை தரும் சிறந்த பயிற்சி.
ஆனால் பிரதமர் மோடி, மக்களின் வரிப் பணத்தை பயன்படுத்தி தான் தியானம் செய்வதை காட்சி ஊடகங்களில் வௌியிட்டு அதை ஒரு பொது நிகழ்ச்சியாக மாற்றி விட்டார். ஆன்மாவுக்கு நன்மை தரும் தியானத்தை காமிராவுக்கு முன் செய்ய கூடாது” என்று காட்டமாக கூறினார்.

மோடி வாரணாசி தொகுதியில் போட்டியிடுவது குறித்த கேள்விக்கு, “மோடி எங்கிருந்து வேண்டுமானாலும் போட்டியிடலாம். ஆனால் வாரணாசி தொகுதியில் பல வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை இருந்தால் பிற வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் ஏன் நிராகரிக்கப்பட்டன மேற்குவங்கத்தில் ஏற்கனவே 6 கட்ட தேர்தலிலேயே மொத்தமுள்ள 33 இடங்களில் 22 இடங்களை திரிணாமுல் காங்கிரஸ் தாண்டி விட்டது” என்று உறுதியுடன் தெரிவித்தார்.

The post மக்கள் வரிப்பணத்தில் ஊடக விளம்பரத்துக்காகவே மோடி தியானம் செய்கிறார்: திரிணாமுல் காங்கிரஸ் கடும் தாக்கு appeared first on Dinakaran.

Related Stories: