மக்களவைத் தேர்தல் காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

புதுடெல்லி: மக்களவைத் தேர்தல் மற்றும் ஆந்திரப் பிரதேசம், ஒடிசா மாநில சட்டப்பேரவை மற்றும் இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ம் தேதி காலை 8 மணிக்குத் தொடங்கும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் 18வது மக்களவை தேர்தல் நடந்து முடிந்தது. அதனுடன் ஆந்திரா, ஒடிசா, சிக்கிம், அருணாச்சலபிரதேச மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடந்தது. இந்தநிலையில் வாக்கு எண்ணிக்கை குறித்து தேர்தல் ஆணையம் நேற்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி சிக்கிம், அருணாச்சல பிரதேசத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 6 மணிக்குத் தொடங்கும். அதே சமயம் மக்களவை மற்றும் ஆந்திரா, ஒடிசா சட்டப்பேரவை, இடைத்தேர்தல்களில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி ஜூன் 4ம் தேதி காலை 8 மணிக்கு தொடங்கும். தேர்தல் நடத்தைபடி, தபால் ஓட்டுகளை எண்ணும் பணி முதலில் தேர்தல் அதிகாரி மேஜையில் தொடங்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.

The post மக்களவைத் தேர்தல் காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை: தேர்தல் ஆணையம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: