பைக் மீது கார் மோதி விபத்து: கணவர் பலி; ஆபத்தான நிலையில் தந்தை

திருவள்ளூர்: காஞ்சிபுரம் மாவட்டம் வையாவூர் கிராமம் மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் கலையரசி(29). இவரது கணவர் சக்கரவர்த்தி(37). கலையரசியின் கணவர் சக்கரவர்த்தியும், கலையரசியின் தந்தை குமாரும் இரு சக்கர வாகனத்தில் உறவினரின் காரியத்திற்கு திருவள்ளூர் சென்று விட்டு திரும்பி வந்து கொண்டிருந்தனர். அப்போது சக்கரவர்த்தி இரு சக்கர வாகனத்தை ஓட்டிக் கொண்டு வந்தார். மப்பேடு அடுத்த நரசிங்கபுரம் என்ற இடத்தில் வந்து கொண்டிருந்த போது எதிரே வந்த இன்னோவா கார் அதிவேகமாக வந்து இரு சக்கர வாகனத்தின் மீது மோதியுள்ளது. இதில் சக்கரவர்த்தி மற்றும் குமார் ஆகிய இருவரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அங்கிருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதில் கலையரசியின் கணவர் சக்கரவர்த்தி மருத்துவமனைக்கு வரும் வழியிலேயே உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மேலும் அவரது தந்தை குமார் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார். இது குறித்து மனைவி கலையரசி மப்பேடு போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post பைக் மீது கார் மோதி விபத்து: கணவர் பலி; ஆபத்தான நிலையில் தந்தை appeared first on Dinakaran.

Related Stories: