அனைத்து திருக்கோயில் தேரோட்டங்களிலும் தேர் இழுக்க இரும்பு சங்கிலி அமைக்க வேண்டும்: துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி வலியுறுத்தல்

தமிழக சட்டப்பேரவையில் துணை சபாநாயகரும், கீழ்பெண்ணாத்தூர் எம்எல்ஏவுமான கு.பிச்சாண்டி பேசுகையில், ‘‘திருவண்ணாமலை கோயிலில் தேரை இழுப்பதற்கு இரும்பு சங்கிலிகள் இருப்பதை போல எல்லா தேரோட்டங்களிலும் இரும்பு சங்கிலிகளை அமைக்க அரசு நடவடிக்கை எடுக்குமா’’ என கேட்டார். இதற்கு பதிலளித்து அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேசுகையில், ‘‘எந்தெந்த திருத்தேர்களுக்கெல்லாம் சங்கிலிகள் தேவையோ, அங்கெல்லாம் பொருத்தப்பட்டு இருக்கிறது.

கடந்த மூன்று ஆண்டுகளில் 8,962 கோயில்களுக்கு மண்டல குழு மற்றும் மாநில வல்லுநர் குழுக்களால் திருப்பணிகள் மேற்கொள்ள அனுமதி வழங்கிய ஆட்சி தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியாகும். ஓடாமல் இருந்த கண்டதேவி கோயில் தேரினை பல்வேறு இன மக்கள் ஒன்று திரட்டி, ஒற்றுமைப்படுத்தி திராவிட மாடல் ஆட்சியின் முத்தாய்ப்பாக 18 ஆண்டுகளுக்குப் பிறகு திருத்தேரை ஓட்டிய பெருமை முதல்வர் மு.க.ஸ்டாலினையை சாரும்’’ என்றார்.

The post அனைத்து திருக்கோயில் தேரோட்டங்களிலும் தேர் இழுக்க இரும்பு சங்கிலி அமைக்க வேண்டும்: துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: