வெளிமாநில தொழிலாளர்களுக்கும் தமிழக தொழிலாளர்கள் போல் உதவிகள் வழங்கப்படும்: அமைச்சர் சி.வி.கணேசன் தகவல்

கீழ்வேளூர் நாகைமாலி (சிபிஐ) தமிழக தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் உதவிகளை புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு வழங்க அரசு முன்வருமா என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்து தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் கூறும்போது, ‘தமிழகத்தைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் அனைத்து உதவிகளும் வெளி மாநில தொழிலாளர்களுக்கும் வழங்கப்படும்.

தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தில் 2600 வெளி மாநில தொழிலாளர்கள் பதிவு செய்துள்ளனர். அவர்களுக்கு அனைத்து நலத்திட்ட உதவிகளும் வழங்கப்படும். தமிழகத்தில் பணியாற்றும் வெளி மாநில தொழிலாளர் ஒருவர் மரணம் அடைந்து விட்டால் அவரின் உடலை சொந்த ஊருக்கு அனுப்பப்படும் அனைத்து செலவுகளையும் தமிழ்நாடு அரசு ஏற்றுக் கொள்ளும். தமிழகத்தில் பணியாற்றும் வெளி மாநில தொழிலாளர்கள் இணையதளம் மூலமாக கட்டாயம் பதிவு செய்ய வேண்டும்’ என்றார்.

The post வெளிமாநில தொழிலாளர்களுக்கும் தமிழக தொழிலாளர்கள் போல் உதவிகள் வழங்கப்படும்: அமைச்சர் சி.வி.கணேசன் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: