இந்தியை விட தமிழ் மொழி மிகவும் பழமை வாய்ந்தது; தமிழ் மீது இந்தி உள்பட எந்த மொழியையும் திணிக்க முடியாது: ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு

சென்னை: இந்தியை விட தமிழ் மொழி மிகவும் பழமை வாய்ந்தது; தமிழ் மீது இந்தி உள்பட எந்த மொழியையும் திணிக்க முடியாது என்று ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் தமிழ் தரிசனம் என்ற தலைப்பில் பனாரஸ் இந்து பல்கலைக்கழக மாணவர்களிடையே ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துரையாடினார். அப்போது பேசிய அவர், தமிழ் மீது இந்தியை திணிக்க முடியாது. பிறமொழி பேசுபவர்கள் தமிழ் மொழி, தமிழ் இலக்கியத்தை கற்றுக்கொள்ள நினைப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்று கூறினார்.

தமிழுக்கு நிகரானது சமஸ்கிருதம்: ஆளுநர் ரவி

சமஸ்கிருதம் மட்டுமே தமிழுக்கு நிகரான பழமை வாய்ந்த மொழி என்று ஆளுநர் ரவி தெரிவித்துள்ளார். இந்தியாவின் ஆன்மீகம், கலாசார நகராக தமிழ்நாடு இருக்கிறது. தமிழ்நாட்டை பொறுத்தவரை 3500 ஆண்டுகளுக்கு மட்டுமல்ல அதற்கு முந்தைய வரலாறும் அதிகமாக இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் ராஜ்பவனில் பனாரஸ் இந்து பல்கலை. மாணவர்களுக்கு தமிழ் தரிசனம் நிகழ்ச்சி நடத்தப்படும் என்று ஆளுநர் தெரிவித்தார்.

இந்தியாவில் தமிழ் தான் தொடர்ச்சியாக பழமைவாய்ந்த மொழியாக இருக்கக்கூடியது. மொழி தொடர்பாக ஆளுநர் ரவி பேசக்கூடிய ஒவ்வொரு வார்த்தைகளும் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், தமிழ் மீது இந்தி மொழியை ஒருபோதும் திணிக்க முடியாது என்று தெரிவித்துள்ளார். தமிழுக்கு நிகரான மொழியாக சமஸ்கிருதத்தை ஒப்பிட்டு ஆளுநர் பேசியிருப்பது சர்ச்சை கருத்தாக பார்க்கப்படுகிறது.

The post இந்தியை விட தமிழ் மொழி மிகவும் பழமை வாய்ந்தது; தமிழ் மீது இந்தி உள்பட எந்த மொழியையும் திணிக்க முடியாது: ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: