அயோத்தி கும்பாபிஷேக விழாவில் 10 கோடி குடும்பங்களை பங்கேற்க வைக்க முடிவு

புதுடெல்லி: அயோத்தியில் உள்ள ராமர் கோயிலில் ஜனவரி 22ம் தேதி நடைபெறும் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்க 10 கோடிக்கும் அதிகமான குடும்பங்களுக்கு அழைப்பு விடுக்கப்படும் என்று விஷ்வ ஹிந்து பரிஷத் தெரிவித்துள்ளது. டெல்லியில் நேற்று செய்தியாளர் கூட்டத்தில் உரையாற்றிய விஎச்பியின் மத்திய செயல் தலைவர் அலோக் குமார் கூறுகையில்,‘நவம்பர் 5ம் தேதி ராம ஜென்மபூமி கோயிலில் புனிதப்படுத்தப்பட்ட அக்ஷத கலசம் ஏற்கனவே நாடு முழுவதும் அனுப்பப்பட்டுள்ளது.

அதனுடன் சென்றுள்ள விஷ்வ இந்து பரிஷத் தொண்டர்கள் நாடு முழுவதும் உள்ள இந்துக் குடும்பங்கள் அயோத்தி கும்பாபிஷேக விழாவில் பங்கேற்கும்படி ஜனவரி 1 முதல் ஜனவரி 15 வரை அழைப்பார்கள். வெளிநாட்டில் வாழும் இந்துக்களை அழைக்கவும் இதேபோன்ற நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 10 கோடி குடும்பங்களை நேரடியாக அயோத்திக்கு அழைக்க ஏற்பாடு ெசய்யப்பட்டுள்ளது. மேலும் ஜனவரி 22ல் அயோத்தியில் ராமர் கோயிலில் நடைபெறும் பிரமாண்டகும்பாபிஷேகம் உலகம் முழுவதிலும் உள்ள ஐந்து லட்சத்திற்கும் அதிகமான கோயில்களில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்’ என்று தெரிவித்தார்.

The post அயோத்தி கும்பாபிஷேக விழாவில் 10 கோடி குடும்பங்களை பங்கேற்க வைக்க முடிவு appeared first on Dinakaran.

Related Stories: