கிர்க் மெக்கன்ஸி 41, அலிக் அதனேஸ் 35, ஜஸ்டின் கிரீவ்ஸ் 33, கவெம் ஹாட்ஜ் 29 ரன் எடுத்தனர். இதைத் தொடர்ந்து, 216 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா 3ம் நாள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 60 ரன் எடுத்திருந்தது. நேற்று நடந்த 4வது நாள் ஆட்டத்தில் அந்த அணி 50.5 ஓவரில் 207 ரன் எடுத்து அனைத்து விக்கெட்டையும் பறிகொடுத்தது. தொடக்க வீரர் ஸ்டீவன் ஸ்மித் 91 ரன்னுடன் (146 பந்து, 9 பவுண்டரி, 1 சிக்சர்) இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
கிரீன் 42, ஸ்டார்க் 21, கவாஜா, மார்ஷ் தலா 10 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஷமார் ஜோசப் 11.5 ஓவரில் 68 ரன்னுக்கு 7 விக்கெட் வீழ்த்தி ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதுகளை தட்டிச் சென்றார். 8 ரன் வித்தியாசத்தில் போராடி வென்ற வெஸ்ட் இண்டீஸ் 1-1 என்ற கணக்கில் தொடரை சமன் செய்ததுடன் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான 12 புள்ளிகளையும் பெற்றது.
The post 2வது டெஸ்டில் ஆஸி. அதிர்ச்சி தொடரை சமன் செய்து வெஸ்ட் இண்டீஸ் அசத்தல் appeared first on Dinakaran.