புவனேஸ்வர்: ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் ஒடிஷா எப்சி அணியுடன் மோதிய சென்னையின் எப்சி அணி 3-2 என்ற கோல் கணக்கில் வென்றது. கலிங்கா ஸ்டேடியத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், 9வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பில் ஒடிஷா எப்சி வீரர் டீகோ மாரிசியோ கோல் அடித்து அந்த அணிக்கு முன்னிலை கொடுத்தார். இடைவேளை வரை இதே நிலை நீடித்தது. இதைத் தொடர்ந்து, 2வது பாதியில் ஒருங்கிணைந்து விளையாடி கடும் நெருக்கடி கொடுத்த சென்னையின் எப்சி அணிக்கு பரூக் சவுதாரி 48வது மற்றும் 51வது நிமிடங்களில் அடுத்தடுத்து கோல் போட்டு அசத்தினார். டேனியல் சிமா 69வது நிமிடத்தில் மேலும் ஒரு கோல் அடிக்க, சென்னையின் எப்சி 3-1 என முன்னிலையை அதிகரித்தது. ஆட்டம் முடிய சில விநாடிகளே எஞ்சியிருந்த நிலையில் ஒடிஷா வீரர் ஆர்.கிருஷ்ணா ஆறுதல் கோல் போட்டார். விறுவிறுப்பான ஆட்டத்தில் முடிவில் சென்னையின் எப்சி 3-2 என்ற கணக்கில் வெற்றியை வசப்படுத்தி 3 புள்ளிகளை தட்டிச் சென்றது.
The post ஒடிஷாவுக்கு எதிராக போராடி வென்றது சென்னையின் எப்சி appeared first on Dinakaran.