* துலீப் டிராபி ஸ்கோர் (அனந்தபூர்): இந்தியா ஏ 290 மற்றும் 115/1, இந்தியா டி 183. இந்தியா சி 525, இந்தியா பி 124/0. இன்று 3வது நாள் ஆட்டம் நடக்கிறது.
* பெர்லினில் அடுத்த வாரம் நடைபெற உள்ள லேவர் கோப்பை டென்னிஸ் தொடரில் (செப். 20-22), ஐரோப்பிய அணிக்காக களமிறங்க இருந்த ஸ்பெயின் நட்சத்திரம் ரபேல் நடால் காயம் காரணமாக விலகியுள்ளார்.
* ஆப்கானிஸ்தான் – நியூசிலாந்து அணிகளிடையே கிரேட்டர் நொய்டாவில் நடக்க இருந்த டெஸ்ட் போட்டி, மழைநீர் வடிகால் வசதியில்லாத மோசமான மைதானம் காரணமாக ஒரு பந்து கூட வீசப்படாத நிலையில் கைவிடப்பட்டது. ஒருநாள், 2 நாள் அல்ல… 5 நாளும் இதே நிலை நீடித்தது கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. 5வது நாள் வரை போட்டி தொடங்காமல் ரத்தாவது, இந்தியாவின் 91 ஆண்டு டெஸ்ட் வரலாற்றில் இதுவே முதல் முறையாகும் (உலக அளவில் 8வது முறை).
The post சில்லி பாயின்ட்… appeared first on Dinakaran.