இது குறித்து அவர் கூறுகையில், “இந்தியாவுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் வெற்றி பெறுவது என்பது எந்த அணிக்குமே சவாலான ஒன்றுதான். பாகிஸ்தானில் வங்கதேச அணி சிறப்பாகத்தான் விளையாடியது. ஆனால் இந்தியாவை இந்திய மண்ணில் வீழ்த்துவது அவ்வளவு எளிது கிடையாது. இந்திய அணி எளிதில் வங்கதேச அணியை தோற்கடிக்கும் என்று நான் நினைக்கிறேன். அதே போன்று இந்த தொடர் முழுவதுமே வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களை தயார் செய்வார்கள் என்று நினைக்கிறேன். ஏனெனில் ஆஸ்திரேலிய தொடருக்கு தயாராகும் வகையில் அது போன்ற ஆடுகளங்கள் அமைக்கப்படும் என்று நான் நினைக்கிறேன் என கூறினார்.
The post வங்கதேச அணியை எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் இந்தியா எளிதில் வீழ்த்தும்: முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் பேட்டி appeared first on Dinakaran.