செங்குன்றத்தில் கஞ்சா கடத்திய 2 பேர் கைது: ஐந்து கிலோ பறிமுதல்

புழல்: செங்குன்றம் காரனோடை சோழவரம் அத்திப்பட்டு மணலி மீஞ்சூர் என்னூர் உள்பட பல பகுதிகளில் போதை பொருட்களான கஞ்சா அதிக அளவில் விற்பனை செய்யப்படுவதாக செங்குன்றம் மதுவிலக்கு பிரிவு போலீசருக்கு பல்வேறு புகார்கள் வந்தது. இந்நிலையில், ஒடிசா மாநிலத்தில் இருந்து செங்குன்றம் வழியாக திருப்பூருக்கு கஞ்சா கடத்தி வருவதாக ரகசிய தகவல் கிடைத்தது இந்த தகவல் பேரில், நேற்று மதியம் மதுவிலக்கு பிரிவு இன்ஸ்பெக்டர் முனியசாமி தலைமையில் மதுவிலக்கு போலீசார் செங்குன்றம் பேருந்து நிலையம் அருகே கண்காணித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது இரண்டு பேர் பைகளை மாற்றிக்கொண்டு பேருந்து நிலையத்தில் சுற்றித்திரிந்ததை பார்த்து அவர்களை பிடித்து சோதனை செய்தனர். அதில் பையில் ஐந்து கிலோ கஞ்சா இருந்தது தெரிய வந்தது. இருவரையும் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை செய்தனர் அதில் அவர்கள் தஞ்சை மாவட்டம் திருவிடை மருதூர் தாலுகா திருப்பனங்கால் கிராமம் காளியம்மன் கோயில் தெருவை சேர்ந்த விமல் ராஜ்(23) திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி தாலுகா வெள்ளநாயக்கனேரி கிராமத்தைச் சேர்ந்த சசிகுமார்(26) என தெரிய வந்தது.

இவர்களிடம் தீவிர விசாரணை செய்ததில் ஒடிசா மாநிலத்தில் இருந்து கஞ்சாவை வாங்கிக் கொண்டு வந்து திருப்பூரில் வேலை செய்யும் தொழிலாளர்கள் மற்றும் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு சிறு சிறு பொட்டலங்களாக விற்பனை செய்ய வந்தது தெரிய வந்தது. இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், அவர்களிடமிருந்து ஐந்து கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். பின்னர், விமல் ராஜ் சசிகுமார் ஆகியோர் கைது செய்து பொன்னேரி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

The post செங்குன்றத்தில் கஞ்சா கடத்திய 2 பேர் கைது: ஐந்து கிலோ பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories: