அமெரிக்காவில் நடுவானில் பறந்த பயணிகள் விமானத்தில் திடீர் தீ: உடனடியாக தரையிறங்கியதால் உயிர் சேதம் தவிர்ப்பு

வாஷிங்டன்: அமெரிக்காவில் நடுவானில் பறந்து கொண்டிருந்த பயணிகள் விமானம் திடீரென்று தீ பிடித்து எரிந்ததால் பரபரப்பு நிலவியது. அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் கொலம்பஸ் நகரில் இருந்து நேற்றைய தினம் போயிங் நிறுவன பயணிகள் விமானம் ஒன்று அரிசோனா மாகாணத்திற்கு சென்றது. விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே பறவை ஒன்று விமானத்தின் எஞ்சினில் மோதியதால் விமானிகள் அச்சமடைந்தனர். பறவை மோதியதும் முதலில் புகைவர தொடங்கிய நிலையில் திடீரென எஞ்சின் தீப்பிடித்து ஏறிய தொடங்கியதால் அதில் பயணித்த மக்கள் பீதியடைந்தனர்.

தீ விபத்து ஏற்பட்டதும் விமான கட்டுப்பாட்டு அறைக்கு பயணிகள் விமானத்தை ஒட்டி சென்ற விமானிகள் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து புறப்பட்ட விமான நிலையத்திலேயே தீப்பிடித்த விமானம் தரையிறக்கப்பட்டது. இந்த விபத்தில் பயணிகள், விமானிகள், பணியாளர்கள் அனைவருமே காயமின்றி தப்பினர். விமானத்தில் தீ விபத்து ஏற்பட்டது குறித்து அமெரிக்கா விமான போக்குவரத்து அமைச்சகம் விசாரணை நடத்தி வருகிறது.

The post அமெரிக்காவில் நடுவானில் பறந்த பயணிகள் விமானத்தில் திடீர் தீ: உடனடியாக தரையிறங்கியதால் உயிர் சேதம் தவிர்ப்பு appeared first on Dinakaran.

Related Stories: