பிரான்சில் முதல் கட்ட நாடாளுமன்ற தேர்தலில் விறுவிறு வாக்கு பதிவு: வலது சாரிகள் வெற்றிபெற வாய்ப்பு

பாரீஸ்: பிரான்ஸ் நாட்டின் நாடாளுமன்றத்துக்கு நேற்று முதல் கட்ட தேர்தல் நடந்தது. பிரான்ஸ் மற்றும் அதன் ஆளுகைக்கு உட்பட்ட கடல் கடந்த பிரதேசங்களிலும் வாக்கு பதிவு விறுவிறுப்பாக நடந்தது. நேற்று மதியம் நிலவரப்படி 25.9 சதவீதம் வாக்குகள் பதிவானது. இந்த தேர்தலில் தீவிர வலது சாரி கட்சியான தேசிய பேரணி, அதிபர் மேக்ரானின் மையவாத கூட்டணி மற்றும் இடதுசாரிகள், சோசலிஸ்ட்கள் அடங்கிய பாப்புலர் முன்னணி ஆகிய 3 தரப்புக்கும் இடையே தான் முக்கிய போட்டி நிலவுகிறது. மொத்தம் 577 உறுப்பினர்களை கொண்ட நாடாளுமன்றத்தில் வலது சாரி கட்சி தான் அதிக இடங்களை வெல்லும் என கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன.

 

The post பிரான்சில் முதல் கட்ட நாடாளுமன்ற தேர்தலில் விறுவிறு வாக்கு பதிவு: வலது சாரிகள் வெற்றிபெற வாய்ப்பு appeared first on Dinakaran.

Related Stories: