குனோ தேசிய பூங்காவில் சிவிங்கி புலிகளை காக்க தென்ஆப்பிரிக்காவில் இருந்து தைலம் இறக்குமதி

ஷியோபூர்: இந்தியாவில் 1952ம் ஆண்டுடன் அழிந்து விட்ட இனமாக அறிவிக்கப்பட்ட சிவிங்கி புலிகள் இனத்தை மீண்டும் மீட்டெடுக்க தென்ஆப்பிரிக்கா, நமீபியா நாடுகளில் இருந்து சிவிங்கி புலிகள் கொண்டு வரப்பட்டு மபியில் உள்ள குனோ தேசிய பூங்காவில் வளர்க்கப்பட்டு வந்தன. இவைகளில் சில சிவிங்கி புலிகள் கடந்த ஆண்டில் பல்வேறு காரணங்களால் தொடர்ந்து உயிரிழந்தன. தற்போது குனோ தேசிய பூங்காவில் 26 பெரிய சிவிங்கி புலிகளும், 13 குட்டிகளும் உள்ளன.

சிவிங்கி புலிகள் உயிரிழப்புக்கு தட்ப,வெப்ப நிலை மாற்றம், மழைக்காலங்களில் ஏற்படும் பாக்டீரியா தொற்றுகள் காரணமாக ரோமங்கள் உதிர்வது போன்றவை காரணம் என விலங்கியல் பூங்கா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மத்தியபிரதேசத்தில் ஏற்கனவே மழைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் சிவிங்கி புலிகளை பாதுகாக்க தென்ஆப்பிரிக்காவில் இருந்து ஆன்டி எக்டோ பாரசைட் மெடிசன் என்ற தைலம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இதை மழைக்காலம் தொடங்கும் முன் 26 பெரிய மற்றும் 13 குட்டி சிவிங்கி புலிகளின் உடலில் தேய்க்க திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

The post குனோ தேசிய பூங்காவில் சிவிங்கி புலிகளை காக்க தென்ஆப்பிரிக்காவில் இருந்து தைலம் இறக்குமதி appeared first on Dinakaran.

Related Stories: