வேளாண்துறைக்கு முதல்வர் ரூ.1000 கோடி ஒதுக்கீடு டெல்டாவில் விரைவில் விவசாய தொழிற்சாலைகள்: அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பேட்டி

தஞ்சாவூர்: ‘வேளாண்துறைக்கு ரூ.1000 கோடி நிதியை முதல்வர் ஒதுக்கி உள்ளார். டெல்டா மாவட்டங்களில் விவசாயம் சார்ந்த தொழிற்சாலைகள் விரைவில் அமையும்’ என்று அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார். தஞ்சாவூரில் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா நேற்று அளித்த பேட்டி: டெல்டா மாவட்டங்கள் மீது முதல்வர் மிகுந்த பாசம் வைத்துள்ளார். விவசாயத்திற்கு என்று தனிபட்ஜெட் கொடுத்தவர். தற்போது டெல்டா மாவட்டங்களில் வேளாண் சார்ந்த தொழிற்சாலை வருவதற்கு ரூ.1000 கோடி நிதியை முதல்வர் ஒதுக்கி உள்ளார். நிச்சயமாக வெகு விரைவில் விவசாயம் சார்ந்த தொழிற்பேட்டைகள் அமைவதற்கான சாத்திய கூறுகள் உள்ளன. டெல்டா மாவட்டங்களில் நிலம் கிடைப்பது கடினம். யாரேனும் நிலத்தை கொடுக்க முன் வந்தால் மிகவும் சந்தோஷம். தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளை போல் ஆயிரம் ஏக்கர், 2,000 ஏக்கரில் தொழிற்பேட்டைகள் தொடங்க சிறிய அளவிலான விவசாயம் சார்ந்த மதிப்பு கூட்டு தொழிற்பேட்டைகள் அமைக்கப்படும். சிறப்பான திட்டங்கள் வெகுவிரைவில் டெல்டா மாவட்டங்களுக்கு வரும். அறுவடைக்குப்பிறகு அதனை மதிப்பு கூட்டி விற்பனை செய்யும் வகையில் தொழிற்சாலைகள் தொடங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

The post வேளாண்துறைக்கு முதல்வர் ரூ.1000 கோடி ஒதுக்கீடு டெல்டாவில் விரைவில் விவசாய தொழிற்சாலைகள்: அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: