ரூ.822 கோடி குத்தகை பாக்கி; உதகை குதிரை பந்தய மைதானத்துக்கு சீல்: வருவாய்த் துறை அதிகாரிகள் அதிரடி

நீலகிரி: உதகை மத்திய பேருந்து நிலையம் அருகே 100 ஆண்டுக்கு மேல் செயல்பட்டு வந்த குதிரை பந்தய மைதானத்திற்கு வருவாய்த்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். ரூ.822 கோடி குத்தகை பாக்கியை செலுத்தாததை அடுத்து நீதிமன்ற உத்தரவுப்படி குதிரை பந்தய மைதானத்துக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. உதகை மத்திய பேருந்து நிலையம் அருகில் 100 ஆண்டுகளுக்கு மேல் குதிரை பந்தய மைதானம் செயல்பட்டு வருகிறது. வருவாய்த் துறை நிலத்தை 99 ஆண்டுகள் குத்தகை எடுத்து மெட்ராஸ் ரேஸ் கிளப் நிர்வாகத்தின் மைதானம் செயல்பட்டு வருகிறது.

குத்தகை காலம் 1978-ம் ஆண்டு உடன் முடிந்த நிலையில் குத்தகை தொகையை செலுத்தாமல் மைதானம் இயங்கி வந்தது. அரசு நோட்டீஸ் அளித்தும் ரேஸ் கிளப் நிர்வாகம் குத்தகை பாக்கியை செலுத்தாததை அடுத்து 2006-ல் ஐகோர்ட்டில் வருவாய்த் துறை சார்பில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் 2019-ல் குதிரை பந்தய மைதானத்தை மீட்க உத்தரவிட்டிருந்தது. நீதிமன்றம் அனுமதி அளித்ததை அடுத்து உதகை கோட்டாட்சியர் மகாராஜா தலைமையில் அதிகாரிகள் 52.4 ஏக்கர் குதிரை பந்தய மைதானத்தை மீட்டனர். போலீஸ் பாதுகாப்புடன் வருவாய்த் துறை அதிகாரிகள் குதிரை பந்தய மைதானத்தை மீட்டு சீல் வைத்தனர்.

 

The post ரூ.822 கோடி குத்தகை பாக்கி; உதகை குதிரை பந்தய மைதானத்துக்கு சீல்: வருவாய்த் துறை அதிகாரிகள் அதிரடி appeared first on Dinakaran.

Related Stories: