மத்திய கூட்டுறவு வங்கியில் கொரோனா விழிப்புணர்வு முகாம்

ஈரோடு, மார்ச் 19: ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைமையகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு முகாம் நடந்தது. மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் கிருஷ்ணராஜ் முகாமை துவக்கி வைத்தார். இதில், வங்கிக்கு வரும் வாடிக்கையாளர்கள் மற்றும் வங்கி பணியாளர்களுக்கு நோய் தடுப்பு நடவடிக்கை குறித்து எடுத்துரைத்தார். அடிக்கடி கைகளை சோப்பு போட்டு கழுவ வேண்டும். ஒவ்வொரு முறையும் கை கழுவ குறைந்தபட்சம் 30 விநாடிகள் எடுத்துக் கொள்ள வேண்டும். இதற்கான உபகரணங்கள் வங்கியின் முன்பகுதியில் வைக்கப்பட்டுள்ளதாக கிருஷ்ணராஜ் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில், மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் பார்த்திபன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கூடுதல் பதிவாளர் சுப்பிரமணியன், வங்கி துணைப்பதிவாளர் அழகிரி, ஈரோடு சரக துணைப்பதிவாளர் மணி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி பொது மேலாளர் ரவிச்சந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>