செய்யூரில் ஆண்டு தோறும் அதிகமான கடலரிப்பு மீனவர்களின் வாழ்வாதாரமான படகுகள், வீடுகள் சேதம்: சட்டப்பேரவையில் திமுக எம்எல்ஏ ஆர்.டி.அரசு பேச்சு

சென்னை, மார்ச் 13: செய்யூரில் ஆண்டு தோறும் அதிகமான கடலரிப்பு ஏற்பட்டு மீனவர்களின் வாழ்வாதாரமான படகுகள், வீடுகள் சேதடைந்து வருவதாக சட்டப்பேரவையில் திமுக எம்எல்ஏ டாக்டர் ஆர்.டி.அரசு கூறினார். சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது, துணை கேள்வி எழுப்பி செய்யூர் தொகுதி எம்எல்ஏ ஆர்.டி.அரசு (திமுக) பேசியதாவது: செய்யூர் தொகுதி, சற்று ஏறக்குறைய 16 மீனவ கிராமங்களை உள்ளடக்கிய பகுதியாகும். மிகவும் ஏழை - எளிய மீனவர்கள் வசிக்கக்கூடிய பகுதி. ஆதலால் அந்த பகுதிகளில் வாழ்கின்ற மீனவர்களின் வாழ்வாதாரத்தை பெருக்கும் வகையில், ஒரு மீன் இறங்குதளம் அமைக்க வேண்டும்.

அதே போல, ஆண்டுதோறும் அந்த பகுதியிலே அதிகமாக  கடலரிப்பு ஏற்பட்ட வண்ணம் உள்ளது. அவர்களுடைய வாழ்வாதாரமான படகுகள் மற்றும் வீடுகள் எல்லாம் சேதமடைந்து விடுகின்ற நிலை இருக்கிறது. எனவே, இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அமைச்சர் ஜெயக்குமார்: கடலரிப்பு ஏற்படுவதால் மீனவர்கள் பாதிக்கப்படுகின்ற நிலை. அதேபோன்று தங்கு தளம் அமைப்பது குறித்து நிதிநிலைக்கு ஏற்ப ஒவ்வொரு ஆண்டும் அறிவித்து கொண்டிருக்கிறோம். அந்த அடிப்படையில் உறுப்பினருடைய கோரிக்கை அரசினுடைய கவனத்திற்கு எடுத்து சென்று கண்டிப்பாக பரிசீலிக்கப்படும். இவ்வாறு விவாதம் நடந்தது.

Related Stories: