தன்வந்திரி சித்தருக்கு சிறப்பு வழிபாடு

சீர்காழி, மார்ச் 6: மயிலாடுதுறை ஆன்மீக பேரவை மற்றும் தமிழ்நாடு திருமூலர் திருமந்திரம் ஆகியவை இணைந்து மாதந்தோறும் வைத்தீஸ்வரன் கோயிலில் வைத்தியநாத சுவாமி திருக்கோயிலில் ஜீவசமாதி கொண்டருளும் தன்வந்திரி சித்தர் பெருமானுக்கு திருக்கயிலாய பரம்பரை தருமபுர ஆதீனம் 27வது குருமகாசந்நிதானம் ல மாசிலாமணி தேசிக ஞானசம்மந்த பரமாச்சாரிய சுவாமிகள் ஆணைப்படி கோயில் கட்டளை திருநாவுக்கரசு தம்பிரான் சுவாமிகள் முன்னிலையில் மாசி புனர்பூசம் நட்சத்திர வழிபாடு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் அன்னம் பாலிப்பு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Related Stories: