பொறையாறு திருமுடி சாஸ்தா அய்யனார் கோயில் தேரோட்டம்

செம்பனார்கோயில், ஏப்.28: பொறையாறு சாஸ்தா அய்யனார் கோயில் சித்திரை திருவிழா தேரோட்டம் நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்டம், பொறையாறில் திருமுடி சாஸ்தா அய்யனார் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா கொண்டாடப்படும். இந்த ஆண்டு சித்திரை திருவிழா கடந்த 19ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து அய்யனார் சாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்கார ஆராதனை நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று தேரோட்டம் நடைபெற்றது. இதையொட்டி திருமுடி சாஸ்தா அய்யனார் சாமிக்கு பல்வேறு நறுமணப் பொருட்களால் அபிஷேகம் செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

பின்னர் சிறப்பு அலங்காரத்தில் சாமியை திருத்தேரில் எழுந்தருள செய்து ஆராதனை நடைபெற்றது. தொடர்ந்து மேள தாளங்கள் முழங்க பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். முக்கிய வீதிகளின் வழியாக சென்ற தேர் மீண்டும் நிலையை அடைந்தது. வழிநெடுகிலும் திரண்டு இருந்த ஏராளமான பக்தர்கள் சாமிக்கு அர்ச்சனை செய்து வழிபட்டனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

The post பொறையாறு திருமுடி சாஸ்தா அய்யனார் கோயில் தேரோட்டம் appeared first on Dinakaran.

Related Stories: