சீர்காழி அருகே நாங்கூர் வண் புருஷோத்தம பெருமாள் கோயில் தேர் வெள்ளோட்டம்

சீர்காழி, மார்ச் 6: சீர்காழி அடுத்த நாங்கூர் வண் புருஷோத்தம பெருமாள் கோயில் தேர் வெள்ளோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேர் இழுத்தனர். சீர்காழி அருகே நாங்கூரில் 108 திவ்யதேச கோயில்களில் ஒன்றான வண்புருஷோத்தம பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயிலில் நிர்வாகத்தினர், உபயதாரர்கள் மற்றும் பக்தர்கள் முலம் சுமார் ரூ.35 லட்சம் மதிபீட்டில் புதிய தேர் செய்யபட்டது. இந்த தேரின் வெள்ளோட்ட நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதனையொட்டி காலையில் பெருமாள் பக்தர்களால் ஊர்வலமாக கொண்டு வரபட்டு தேரில் சிறப்பு அலங்காரத்தில் ஏழுந்தருளினார்.

பின்னர் பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. கோயிலின் பரம்பரை ஆதினகர்த்தர்கள் னிவாசன், கண்ணன், புருஷோத்தமன், ஆகியோர் கலந்து கொண்டு தேரோட்டத்தை தொடக்கி வைத்தனர். இதனை தொடர்ந்து பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுக்க நான்கு வீதிகளிலும் வலம் வந்து நிலையை வந்தடைந்தது. இதில் நாகை மாவட்ட கவுன்சிலர் ஆனந்தன். ஊராட்சி மன்றத் தலைவர் சுகந்திநடராஜன், திமுக பிரமுகர் ராஜதுரை, கிராம பொது நல சங்கத் தலைவர் அன்பு ஓய்வுபெற்ற விஏஓ ரகுநாதன் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை திருவெண்காடு சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் தலைமையில் போலீசார் செய்திருந்தனர்.

Related Stories: