திருத்துறைப்பூண்டியில் ஆசிரியர் காலிப்பணியிடம் நிரப்ப வலியுறுத்தி கையெழுத்து இயக்கம்

திருத்துறைப்பூண்டி, மார்ச் 3:திருத்துறைப்பூண்டியில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் அரசு மற்றும் ஆசிரியர் காலிபணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு கோடி இளைஞர் சந்திப்பு கையெழுத்து இயக்கம் திருத்துறைப்பூண்டி காமராஜர் சிலை அருகே நடைபெற்றது. அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற ஒன்றிய தலைவர் கணேஷ் தலைமை வகித்தார். நகர தலைவர் ஷேக்தாவுது, செயலாளர் கார்த்திக் முன்னிலை வகித்தனர். முன்னாள் எம்எல்ஏக்கள் பழனிச்சாமி, சிவ புண்ணியம், உலகநாதன், ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் பாஸ்கர் ஆகியோர் கையெழுத்து இயக்கத்தை துவக்கி வைத்தனர்.

இதில் ஞானமோகன், வையாபுரி, சந்திரராமன், தமயந்தி, ஜோசப், ராஜா மற்றும் பலர் கலந்து கொண்டனர். கையெழுத்து இயக்கத்தில் அரசு, ஆசிரியர் காலிபணியிடங்களை நிரப்ப வேண்டும், தடையாக உள்ள அரசாணை 56ஐ ரத்து செய்ய வேண்டும், வேலையில்லாத பட்டதாரிகளுக்கு ரூ.10 ஆயிரம் மாதந்தோறும் வழங்க வேண்டும், மத்திய அரசின் தொழில் நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் வங்கி, ரயில்வே, இன்சூரன்ஸ் துறை பணியிடங்களில் இளைஞர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.

Related Stories: