ஒரே நாளில் 89 தெரு நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை

மன்னார்குடி, ஏப். 28: மன்னார்குடி நகராட்சி சார்பில் செயல்பட்டு வரும் நாய்களுக்கான கருத்தடை அறுவை சிகிச்சை மையத்தில் ஒரே நாளில் 89 தெரு நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக ஆணையர் குமரன் தெரிவித்தார். மன்னார்குடி ஆர்பிசிவம் நகர் பகுதியில் நாய்களுக்கான கருத்தடை அறுவை சிகிச்சை மையம் நகராட்சி சார்பில் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், நகரத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து கும்பகோணத்தை சேர்ந்த தனியார் தொண்டு நிறுவன பணியாளர்கள் மூலம் நேற்று பிடித்து வரப்பட்ட 89 நாய்களுக்கு கால்நடை மருத்துவர் தலைமை யிலான மருத்துவ குழுவினர் கருத்தடை அறுவை சிகிச்சை மேற் கொண் டனர்.

இதுகுறித்து நகராட்சி ஆணையர் குமரன் கூறுகையில், தெரு நாய்கள் பெருக்கத்தால் சமீப காலமாக பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டு வருவதாக புகார்கள் வந்தன. இதையடுத்து பொதுமக்கள் நலன் கருதி தெரு நாய்களுக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் பயிற்சி பெற்ற பணியாளர்கள் மூலம் நாய்கள் பிடிக்கப்பட்டு நகராட்சிக்கு சொந்தமான கருத்தடை அறுவை சிகிச்சை மைய த்தில் வைத்து கருத்தடை செய்யப்பட்டு வருகிறது. இதன் காரணமாக நகரா ட்சி பகுதிகளில் தெரு நாய்கள் தொல்லை குறையும். இப்பணிகள் தொடர்ந்து நடைபெறும் என்றார்.

The post ஒரே நாளில் 89 தெரு நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை appeared first on Dinakaran.

Related Stories: