திண்டுக்கல், பிப். 27: திண்டுக்கல், செம்பட்டி, வத்தலக்குண்டுவில் அதிகாரிகள் சோதனை நடத்தி புகையிலை விற்றவர்களுக்கு ரூ.74 ஆயிரம் அபராதம் விதித்தனர். திண்டுக்கல் மாவட்டத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் அதிகளவில் புழக்கத்தில் உள்ளதாக மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் நடராஜனுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர் ஜோதிமணி, ரமேஷ் ஆகியோர் திண்டுக்கல்- பழநி பைபாஸ் சாலையில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது 2 கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை, பிளாஸ்டிக் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.
