கால்நடை பராமரிப்பு பயிற்சி

வத்தலக்குண்டு, ஜன.10: வத்தலக்குண்டு பகுதியில் வேளாண் கல்லூரி மாணவிகள், விவசாயிகளுக்கு கால்நடை குறித்த பயிற்சி அளித்தனர். வத்தலக்குண்டுவில், தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே குள்ளப்புரம் வேளாண் கல்லூரியில் நான்காம் ஆண்டு பயிலும் மாணவிகள், வத்தலக்குண்டு பகுதியில் கிராம தங்கல் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதைத்தொடர்ந்து கால்நடை மருத்துவரின் அறிவுரைப்படி வேளாண் கல்லூரி மாணவிகள் கால்நடை பற்றி விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தனர். கால்நடைகளை தாக்கக்கூடிய நோய்கள் பற்றியும், அதனை தடுக்கும் வழிமுறைகள் பற்றியும் எடுத்துரைத்தனர். மேலும் உயிரி வாயு உற்பத்தி பற்றிய செயல் விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. இதில் வேளாண் தொழில்நுட்பக் கல்லூரியைச் சேர்ந்த மாணவிகள் கலந்து கலந்து கொண்டனர்.

 

Related Stories: