குஜிலியம்பாறையில் சூதாட்டத்தில் பறிமுதல் செய்த சேவல்கள் ஏலம்

குஜிலியம்பாறை, ஜன. 9: குஜிலியம்பாறை அருகே இலுப்பப்பட்டியில் முன் அனுமதி ஏதுமின்றி பணம் வைத்து சட்ட விரோதமாக நடைபெற்ற சேவல் சண்டை சூதாட்டத்தில் சூதாட்ட கும்பலை கடந்த டிச.27ம் தேதி சுற்றி வளைத்த தனிப்படை போலீசார் 8 பேரை கைது செய்தனர். இவர்களிடமிருந்து ரூ.1 லட்சத்து 27 ஆயிரம் ரொக்க பணம், 62 டூவீலர்கள் மற்றும் 7 சேவல்களை தனிப்படை போலீசார் பறிமுதல் செய்து வழக்குப்பதிந்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட 7 சேவல்களை பொது அறிவிப்பு செய்து ஏலம் விட நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, சேவல்கள் ஏலம் குஜிலியம்பாறை காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் அன்னமயில் தலைமையில் நேற்று நடந்தது. ஏலத்தில் மொத்தம் 21 பேர் பங்கேற்றனர்.

சேவல்களின் உடல் எடை அடிப்படையில் ஆரம்ப விலை நிர்ணயம் செய்யப்பட்டு ஏலம் நடத்தப்பட்டது. இதில் சேவல்கள் ரூ.4,500, ரூ.2,600, ரூ.5,000, ரூ.1,500, ரூ.2,800, ரூ.6,100, ரூ.11,200 ஆகிய விலைக்கு ஏலம் போனது. இதில் கீரி என்ற பெயருடைய சேவலை குஜிலியம்பாறையை சேர்ந்த சிவக்குமார் (25) என்பவர் அதிகபட்சமாக ரூ.11,200க்கு ஏலம் எடுத்தார்.

 

Related Stories: