வத்தலக்குண்டு, ஜன. 9: வத்தலக்குண்டு அருகே பங்களாபட்டியை சேர்ந்தவர் மனோகர் ஜோஷி (23). சிவில் இன்ஜினியரான இவர், மற்றொரு இன்ஜினியரிடம் ஜூனியராக பணியாற்றி வந்தார். இவர் நேற்றிரவு 7 மணியளவில் வத்தலக்குண்டுவிலிருந்து பங்களாபட்டிக்கு டூவீலரில் சென்று கொண்டிருந்தார். மல்லனம்பட்டி ஆரம்ப சுகாதார நிலையம் அருகே வந்த போது அடையாளம் தெரியாத வாகனம் இவரது டூவீலர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது.
இதில் டூவீலரிலிருந்து தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த மனோகர் ஜோஷி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்ததும் வத்தலக்குண்டு எஸ்ஐ ஜாபர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வத்தலக்குண்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
