வாலாஜாபாத், பிப்.25: ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து பகுதிகளிலும் காசநோய் ஒழிப்பு வாரம் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் துண்டு பிரசுரங்களை வழங்கும் நிகழ்ச்சிகளும் நடந்தன.இதன் ஒரு பகுதியாக வாலாஜாபாத் பஸ் நிலையத்தில் காசநோய் அலகின், அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் வேல்முருகன் தலைமையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட நலக் கல்வியாளர் பாபு சுதந்திரநாத், முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் ஜெயபிரகாஷ், ஆய்வக நுட்புநர் வினோத்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.